ஜேர்மனியில் பொலிஸ் கார்கள், ஹெலிகொப்டர் உதவியுடன் பசுவை துரத்திய பொலிசார்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பசு ஒன்று தப்பிவிட்டது, அதைப் பிடிக்கவேண்டும் என தகவல் கிடைத்தபோது முதலில் சிரித்த பொலிசார், பின்னர் பல பொலிஸ் கார்கள், நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்ட ஒரு ஹெலிகொப்டர் ஆகியவற்றுடன் களத்தில் இறங்கிய பின்னர்தான் அந்த பசுவை பிடிக்க முடிந்திருக்கிறது.

ஜேர்மனியின் பவேரிய நகரமான Sand am Mainஇல் இரண்டு பசுக்கள் ஒரு விவசாயியின் வீட்டிலிருந்து தப்பி விட்டிருக்கின்றன.

அவற்றில் ஒன்றை அவர் எப்படியோ துரத்திப் பிடித்துவிட, மற்றொரு பசு நகருக்குள் ஓடிவிட்டிருக்கிறது.

பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட, முதலில் அவர்கள் அந்த பசுவை பிடிக்க முயன்றிருக்கிறார்கள்.

ஆனால், அந்த பசு, ஒரு ஸ்கூட்டர் மற்றும் ஒரு பொலிஸ் வாகனத்தை சேதப்படுத்திவிட்டு, நகருக்குள் ஓட, பொலிசார் பல பொலிஸ் கார்கள், மற்றும் தெர்மல் கமெரா பொருத்தப்பட்ட ஒரு ஹெலிகொப்டருடன் அதை தேடத் துவங்கியிருகிறார்கள்.

நெடு நேர தேடலுக்குப்பின், ஹெலிகொப்டரில் பொருத்தப்பட்ட தெர்மல் கமெரா உதவியால் ஒரு இடத்தில் அந்த பசு இருப்பதை பொலிசார் கண்டுபிடிக்க, அந்த பசுவின் உரிமையாளரான விவசாயி அதை பிடிக்க முயலும்போது, அந்த பசு அந்த விவசாயியை முட்டித் தள்ளியிருக்கிறது.

கடைசியாக கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் மயக்க ஊசி ஒன்றை செலுத்தி அந்த பசுவை பிடித்திருக்கிறார்கள் பொலிசார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்