ஒரு மணி நேரம் பின்னோக்கி நகர்த்தப்படும் கடிகாரங்களால் நோய்வாய்ப்படும் ஜேர்மானியர்கள்: ஆய்வு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

வரும் வார இறுதியிலிருந்து ஜேர்மனியில் கடிகாரங்கள் ஒரு மணி நேரம் பின்னோக்கி நகர்த்தப்பட உள்ள நிலையில், அது ஜேர்மானியர்கள் பலருக்கு உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது.

வரும் ஞாயிறு (அக்டோபர் 27) ஜேர்மன் கடிகாரங்கள் ஒரு மணி நேரம் பின்னோக்கி நகர்ந்து குளிர்காலத்தை வரவேற்க இருக்கின்றன.

ஆனால் ஜேர்மனியில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள், பெரும்பான்மை ஜேர்மானியர்கள் இந்த நேர மாற்றம் ஒழிக்கப்பட வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளன.

சமீபத்தில் காப்பீடு நிறுவனம் ஒன்றின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, இந்த நேர மாற்றத்தால், மூன்றில் ஒரு ஜேர்மானியர் (29 சதவிகிதத்தினர்) உடல் மற்றும் மன நல பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக கண்டறிந்துள்ளது. அதுவும், சமீப காலமாக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வரும் ஞாயிறு அதிகாலை 3 மணிக்கு கடிகாரங்கள் அனைத்தும் ஒரு மணி நேரம் பின்னோக்கி நகர்த்தப்பட்டு, 2 மணியாக மாற்றி வைக்கப்படும்.

இது daylight savings என்று அழைக்கப்படும், அதாவது குளிர் காலங்களில் மாலையில் ஒரு மணி நேரத்திற்கு நல்ல வெளிச்சம் இருக்கும்.

ஆகவே, அந்த வெளிச்சத்தை பயன்படுத்திக் கொள்வதற்காக இந்த நேர மாற்றம் செய்யப்படுகிறது.

ஆனால், இதற்கு பல ஐரோப்பிய நாடுகளிலும் எதிர்ப்பு உருவாகி வருகிறது. பெரும்பாலானோர் இப்படி தங்கள் கடிகாரத்தை மாற்றி மாற்றி வைப்பதை விரும்பவில்லை என்று ஜேர்மனியின் நிதி அமைச்சர் Peter Altmaierம் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்