சிரியா போர்... ஜேர்மனியின் சூப்பர் திட்டம்... வரவேற்ற குர்திஷ் போராளிகள்

Report Print Basu in ஜேர்மனி

சிரியாவின் வடக்கில் பாதுகாப்பு வலயத்தை நிறுவதற்கான சர்வதேச படைக்கான ஜேர்மனி திட்டத்தை சிரியாவின் குர்திஷ் படையின் உயர் தளபதி வரவேற்றுள்ளார்.

பிரஸ்ஸல்ஸில் நடைபெற்று வரும் நேட்டோ கூட்டத்தில் இந்த திட்டத்தை தனது சக நாடுகளுடன் எழுப்பப்போவதாக ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் Annegret Kramp-Karrenbauer தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் முன்மொழிவை நடைமுறைப்படுத்த ஐ.நா. ஒப்புதல் தேவை என்றும், எனவே எந்தவொரு முடிவும் எடுப்பதற்கு முன்னர் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என்றும் நேட்டோ பொதுச்செயலாளர் Jens Stoltenberg கூறினார்.

ஜேர்மனியின் இந்த முயற்சி அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் இதுவரை அனுமதியளிக்க தடுமாறி வருகிறது.

ஜேர்மனியின் திட்டத்தை வரவேற்ற குர்திஷ் படையின் உயர் தளபதி Mazloum Abdi, நாங்கள் இதைக் கோருகிறோம், ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறினார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் தான் பேசியதாக கூறிய Mazloum Abdi, ஆனால் இந்த திட்டம் இன்னும் கருவாக இருப்பதாகவும், சிரிய மோதலில் ஆதிக்கம் செலுத்தும் ரஷ்யாவிடமிருந்து ஒப்புதல் தேவை என்றும் ஒப்புக் கொண்டதாக கூறினார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்