ஜேர்மனியில் சாதித்துள்ள கேரள நாட்டவரின் படைப்பு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பெர்லினில் நடைபெற்ற ஃப்ராங்பர்ட் சர்வதேச புத்தக கண்காட்சியில், கேரளாவைச் சேர்ந்த ஒருவரின் புத்தகம் அதிக விற்பனையாகும் புத்தகங்கள் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.

இரண்டாம் தலைமுறை ஜேர்மானிய மலையாளியான Beyonc Kattillam (35) என்பவர் எழுதிய, The Rishaw DRiver of Fortune' என்ற புத்தகத்திற்குத்தான் அந்த பெருமை கிடைத்துள்ளது.

ஃப்ராங்பர்ட் புத்தகக் கண்காட்சி உலகிலேயே பெரிய புத்தகக் கண்காட்சியாகும். 7,500 படைப்பாளர்களின் படைப்புகளுக்கு நடுவில், Beyoncக்கு இந்த பெருமை கிடைத்துள்ளது.

manoramaonline

Beyoncஇன் தந்தை தனது மகன் ஒரு மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். தற்போது மகன் அடைந்துள்ள புகழ் அவரையும் பெருமையடையச் செய்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

இப்படி ஒரு வெளிநாட்டவரின் படைப்பு புகழ் பெறுவது ஜேர்மனியில் ஒரு அபூர்வ நிகழ்வு என்று ஜேர்மன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

கேரளாவில் பிறந்த Beyonc இன் பெற்றோர் பல ஆண்டுகளுக்குமுன் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

manoramaonline

manoramaonline

manoramaonline

manoramaonline

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்