முன்னாள் காதலியை சந்திப்பதற்காக சிறையிலிருந்த இளைஞர் மேற்கொண்ட அதிரடி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

தனது முன்னாள் காதலியை சந்தித்து மீண்டும் காதலை புதிப்பித்துக்கொள்வதற்காக சிறையிலிருந்து சுவர் ஏறிக் குதித்த ஒரு இளைஞர் பிடிபட்டார்.

மின் விளக்குக் கம்பம் ஒன்றைப் பிடித்து ஏறி, 13 அடி உயர சுவரை தாண்டிக் குதித்த அவர், கைதிகள் தப்பிக்கக்கூடாது என்பதற்காக அமைக்கப்பட்டிருந்த முள்வேலியில் உடைகள் சிக்கிக் கொள்ளாமல் தடுப்பதற்காக அரை நிர்வாணமாக சிறையிலிருந்து வெளியேறியுள்ளார்.

ஒரு வழியாக தனது முன்னாள் காதலி வீட்டை அடைந்த அவர், அந்த வீட்டின் முதல் தளம் வரை சென்றுவிட்டிருக்கிறார்.

ஆனால் அதற்குள் பொலிசார் வந்துவிட்டார்கள்.

அவரை கீழே இறங்குமாறு கேட்டுக்கொண்டும் அவர் இறங்காததால், ஏணி ஒன்றை பயன்படுத்தி அவரை மீட்டிருக்கிறார்கள் பொலிசார்.

தற்போது சிறையின் சுவரை ஒட்டியிருந்த மின் விளக்குக் கம்பத்தின் மீதும் முள்வேலி அமைத்திருக்கிறார்கள் சிறை அலுவலர்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்