ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை நோக்கி படையெடுக்கும் பிரித்தானியர்கள்: ஜேர்மன் ஆய்வு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை நோக்கி படையெடுக்கும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளாக சமீபத்தில் ஜேர்மன் நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை நோக்கி படையெடுக்கும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அந்த ஆய்வு, அதுவும் 2016ஆம் ஆண்டு பிரெக்சிட் வாக்கெடுப்புக்குப்பின் அது மிகவும் வேகமெடுத்துள்ளதாக தெரிவிக்கிறது.

இந்த ஆண்டில் மட்டும், 84,000 பிரித்தானியர்கள் பிரித்தானியாவை விட்டு மற்றொரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், 2008இல் அந்த எண்ணிக்கை 59,000ஆக இருந்ததாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

2018ஆம் ஆண்டில், 11,500 பிரித்தானியர்கள் பிரித்தானியாவிலிருந்து ஜேர்மனிக்கு குடிபெயர்ந்ததாகவும், 2008இல் அந்த எண்ணிக்கை 8,500க்கு சற்று அதிகமாக இருந்ததாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Photograph: Andy Hall/The Observer

Oxford in Berlin என்ற அமைப்பும், WZB, the Berlin Social Science Centre என்ற நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட அந்த ஆய்வில், ஜேர்மானிய குடியுரிமைக்காக விண்ணப்பிக்கும் பிரித்தானியர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

2015ஆம் ஆண்டில் 622 பிரித்தானியர்கள் ஜேர்மன் குடியுரிமை பெற்ற நிலையில், 2017ஆம் ஆண்டு 7,493 பிரித்தானியர்கள் ஜேர்மன் குடியுரிமை பெற்றிருக்கிறார்கள்.

இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொருத்தவரையில், 2015 இல் குடியுரிமை பெற்ற பிரித்தானியர்களின் எண்ணிக்கை 2,106 ஆக இருந்தது, 2017இல் 14,678 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எதனால் இந்த முடிவு என, ஜேர்மனியில் வசிக்கும் 2008க்கும் 2019க்கும் இடையில் பிரித்தானியாவிலிருந்து ஜேர்மனிக்கு வந்த பிரித்தானியர்களைக் கேட்டபோது, 30 சதவிகிதத்தினர், பிரெக்சிட் தங்கள் மன நலன் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார்கள்.

ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் பாதிப்பேர், தங்கள் ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமையை தக்கவைத்துக்கொள்வதற்காக, தங்கள் பிரித்தானிய குடியுரிமையை கைவிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்