ஜேர்மனியில் வேகமாக வந்த ரயில் முன் தள்ளிவிடப்பட்ட நபர் பலி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பெர்லின் ரயில் நிலையம் ஒன்றில் இரு கோஷ்டிகளுக்கிடையே நடைபெற்ற மோதலில், வேகமாக வந்த ரயில் முன் தள்ளிவிடப்பட்ட ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

பெர்லினின் Kreuzberg ரயில் நிலையத்தில், ஒருவர் வேகமாக வந்த ரயில் முன் தள்ளிவிடப்பட்ட நிலையில், அவர் வேண்டுமென்றே தள்ளிவிடப்பட்டாரா அல்லது சண்டையின்போது எதிர்பாராத விதமாக இந்த துரதிர்ஷ்ட சம்பவம் நிகழ்ந்ததா என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

செவ்வாயன்று நள்ளிரவில் ரயில் நிலையத்தில் இரு கோஷ்டிகளுக்கிடையே நிகழ்ந்த மோதலின்போது, ஒருவர் இன்னொருவரைப் பிடித்துத் தள்ள, அவர் ரயில் தண்டவாளத்தில் விழ, வேகமாக வந்த ரயில் அவர் மீது ஏறியதில் படுகாயமடைந்துள்ளார் அவர்.

அந்த காயங்கள் மிக மோசமானவையாக இருந்ததால், சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் நடந்தபோது அந்த இடத்தில் இருந்தவர்களை விசாரித்த பொலிசார், அதை வீடியோ எடுத்தவர்களிடமிருந்து வீடியோ காட்சிகளை பெற்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த நபர் தண்டவாளத்தில் விழுந்ததும், அவரைப் பிடித்து தள்ளியர் அங்கிருந்து நழுவியுள்ளார்.

CCTV கமெரா காட்சிகளைக் கொண்டு உயிரிழந்தவர் மற்றும் சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளனர்.

இந்த அசம்பாவித சம்பவம் காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டதால், ரயில்கள் பல தாமதமாக புறப்பட்டன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்