இந்திய வருகையின்போது இதை அனுமதிக்கவேண்டும்: ஜேர்மன் அதிபரின் கோரிக்கையை ஏற்ற இந்தியா!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் இந்தியா வந்துள்ள நிலையில், அவர் சார்பில் ஒரு வித்தியாசமான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாகவே ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் உடல் நல பிரச்னைகள் காரணமாக அவர் நிற்கும்போதெல்லாம், அவரது உடல் கடுமையாக நடுங்குவதை உலகமே கண்டு அதிர்ச்சியடைந்தது.

இந்நிலையில், இந்தியா வந்துள்ள ஜேர்மன் அதிபர் சார்பில் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அது, தேசிய கீதம் ஒலிக்கும்போது, அமர்ந்துகொள்ள ஏஞ்சலாவை அனுமதிக்கவேண்டும் என்பதுதான்! இந்தியா அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.

ராஷ்ட்ரபதி பவனில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியின்போது, ஜேர்மனி மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் தேசிய கீதங்கள் ஒலிக்கும்போதும், ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் அமர்ந்துகொள்ளலாம் என அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

@MEAIndia

@MEAIndia

@MEAIndia

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்