மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நான்கு நோயாளிகள் மரணம்: விசாரணையில் வெளியான அதிர வைக்கும் உண்மை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் மருத்துவமனை ஒன்றில், பெண் மருத்துவர் ஒருவரால் மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நான்கு நோயாளிகள் மரணமடைந்ததையடுத்து பொலிசார் விசாரணையில் இறங்கியதில், அவர் மருத்துவரே இல்லை என்ற அதிர வைக்கும் உண்மை தெரியவந்தது.

ஜேர்மனியின் Fritzlar நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் 2015க்கும் 2018க்கும் இடையில் ஒரு குறிப்பிட்ட மருத்துவர் மயக்க மருந்து கொடுத்த நான்கு நோயாளிகள் உயிரிழந்ததோடு, எட்டு பேருக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது.

பொலிஸ் விசாரணையில் அவர்கள் அத்தனை பேருக்கும் மயக்க மருந்து கொடுத்தவர் ஒரு பெண் மருத்துவர் என்பது தெரியவந்தது.

அந்த 48 வயது மயக்கமருந்து நிபுணரை விசாரித்தபோது, அவர் மருத்துவரே அல்ல என்பது தெரியவர, அதிர்ச்சியடைந்துள்ள பொலிசார், மூன்று ஆண்டுகளாக அந்த மருத்துவமனையில் அவர் பணியாற்றிவந்துள்ள நிலையில், தொடர்ந்து இத்தனை உயிரிழப்புகளுக்குப் பின்னரும் அவர் பணியில் தொடர அனுமதிக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனையில் அவரது மேற்பார்வையாளர்களாக இருந்தவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள அந்த பெண் மீது, கொலை, காயம் ஏற்படுத்துதல், போலி ஆவணங்களை கொடுத்தது, மோசடி மற்றும் மருத்துவர் என்ற பெயரை தவறாக பயன்படுத்தியது, ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்