இந்திய வம்சாவளி இளம்பெண்ணுக்கு ஜேர்மனி கொடுத்துள்ள கவுரவம்: வலதுசாரியினர் எதிர்ப்பு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் நகரம் ஒன்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு பெரும் கவுரவம் ஒன்றை அளித்துள்ள நிலையில், வலதுசாரியினர் அதை எதிர்ப்பது மக்களிடயே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 'Christ Child' என்னும் பொறுப்பு ஒரு சிறுவனுக்கோ அல்லது சிறுமிக்கோ கொடுக்கப்படும்.

இரண்டு ஆண்டுகளுக்கு அவர்கள் அந்த பொறுப்பில் இருப்பார்கள். நகரின் கிறிஸ்துமஸ் சந்தையை திறந்து வைப்பது, நகரங்கள், பள்ளிகள் மற்றும் முதியோர் இல்லங்களை சந்திப்பது ஆகியவை அவர்களது பொறுப்பு.

இம்முறை Nuremberg நகரில் 'Christ Child' ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் Benigna Munsi (17). Nurembergஇல் பிறந்த Benignaவின் தந்தை இந்தியர், தாய் ஜேர்மானியர்.

GETTY IMAGES

Benigna கலப்பினப்பெண்ணாக இருப்பதையடுத்து, அதுவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருப்பதையடுத்து, வலதுசாரிக் கட்சியாகிய Alternative for Germany (AfD) அவரை விமர்சித்துள்ளது.

AfD கட்சியைச் சேர்ந்த ஒருவர் பேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு இடுகையில், எப்படி பூர்வக்குடி அமெரிக்கர்கள் ஒழிக்கப்பட்டார்களோ அதேபோல் ஜேர்மன் மக்களும் அழிக்கப்படுகிறார்கள் என்று கூறியிருந்தார்.

அத்துடன், Nurembergக்கு ஒரு புதிய Christ Child தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், ஒரு நாள் நாமும் இந்தியர்கள் போலவே மாறப்போகிறோம் என்றும் விமர்சித்திருந்தார் அந்த நபர்.

மற்றொரு AfD உறுப்பினர், அந்த பெண்ணின் வெளிநாட்டு மூக்கு, பாரம்பரியத்தை பின்பற்றும் ஜேர்மானியர்களின் முகத்தில் அறைவது போல் உள்ளது என்று கேலி செய்திருந்தார்.

இந்த விமர்சனங்கள் Nuremberg மக்களை கோபமூட்டியுள்ள நிலையில், நகர மேயரான Ulrich Maly, இதற்கு முன்பும் இதேபோல் முட்டாள்தனமான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டதுண்டு, ஆனால் இம்முறை வைக்கப்பட்டுள்ளவை வெளிப்படையான இன வெறுப்பு விமர்சனங்கள் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் Christ Child ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளது தனக்கு மகா சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளதாக Benigna தெரிவித்துள்ளார்.

Benignaவுக்கு பவேரியாவின் தலைவரான Markus Söder முதல், பொதுமக்கள் வரை பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்துவருகிறார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்