உள்ளங்கையில் களிமண்ணுடன் கைகுலுக்கும் ஜேர்மானியர்கள்: இது என்ன புது சவாலா?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

உள்ளங்கையில் களிமண் உருண்டை ஒன்றை வைத்து, அதில் தங்கள் கையின் அடையாளம் பதியும் வகையில் ஜேர்மானியர்கள் கைகுலுக்கி வருகிறார்கள், ஒரு முக்கிய நிகழ்வை வித்தியாசமாக நினைவுகூருவதற்காக!

கிழக்கு மேற்கு என சுவர் ஒன்றால் பிரிக்கப்பட்டிருந்த ஜேர்மனி ஒன்றிணைந்ததை நினைவுகூரும் வகையில், ஆயிரக்கணக்கான முன் பின் அறிமுகம் இல்லாத ஜேர்மானியர்கள் இப்படி கைகுலுக்கி வருகிறார்கள்.

நவம்பர் மாதம் 9ஆம் திகதி பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் 30ஆம் ஆண்டு விழா கொண்டாடப்படுவதையொட்டி, இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

1989ஆம் ஆண்டு பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட நிலையில், அன்றிலிருந்து 10,957 நாட்கள் ஆவதைக் குறிக்கும் வகையில், 10,957 கைரேகைகள் படிந்த களிமண் உருண்டைகளை உருவாக்கும் முயற்சியாக இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

இந்த களிமண் சிற்பங்கள் ஜேர்மனி ஒன்றிணைந்ததன் அடையாளமாக உருவாக்கப்பட்டு வருகின்றன.

https://www.euronews.com/embed/917838

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்