ஜேர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த தமிழ்ப்பெண்

Report Print Vijay Amburore in ஜேர்மனி

தமிழ்முறைப்படி கோவையை சேர்ந்த பெண் ஒருவர் ஜேர்மன் மாப்பிள்ளையை திருமணம் செய்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவருடைய மகள் வித்யபிரபா (28). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஜேர்மனில் பணியாற்ற சென்றிருந்தார்.

அங்கு இவருக்கும் ஜேர்மன் நாட்டை சேர்ந்த மைக்கேல் ஷீல்டஸ் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர்.

அதன்படி, மணமகனின் உறவினர்கள் 50 பேர் கடந்த வாரம் ஜேர்மனியில் இருந்து இந்தியா வந்தனர். இதனையடுத்து மேட்டுப்பாளையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இந்த ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்