முதன்முறையாக ஜேர்மனிக்கு ஒரு துருக்கிய வம்சாவளி மேயர்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
169Shares

ஜேர்மன் நகரம் ஒன்றிற்கு முதன்முறையாக துருக்கிய வம்சாவளியினர் ஒருவர் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மன் நகரமான Hannover துருக்கிய வம்சாவளியினர் ஒருவரை மேயராக தேர்வு செய்துள்ள பெருமையை பெற்றுள்ளது.

ஜேர்மன் பசுமைக் கட்சியைச் சேர்ந்த Belit Onay (38), தன்னுடன் போட்டியிட்ட CDU கட்சியினரான Eckhard Scholzஐ தோற்கடித்து 52.9 % வாக்குகள் பெற்று மேயராகியுள்ளார்.

Hannover, Freiburg, Darmstadt மற்றும் Stuttgartஐத் தொடர்ந்து ஜேர்மனியின் நான்காவது பெரிய நகரமாகும்.

சட்டத்தரணியான Onay, Lower Saxony நாடாளுமன்றத்தில் 2013 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

அதற்கு முன் 2011முதல் நகர கவுன்சிலராக இருந்தார் அவர். Onayயின் பெற்றோர் 1970களில் இஸ்தான்புல்லிலிருந்து ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து வந்தவர்கள்.

ஜேர்மனியில் துருக்கிய வம்சாவளியினர் சுமார் 3 மில்லியன் பேர் வாழ்கிறார்கள். துருக்கியைத் தொடர்ந்து உலகில் துருக்கியர்கள் அதிகம் வாழும் நாடு ஜேர்மனி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்