2019ம் ஆண்டுக்கான புகலிடம் கோரும் அகதிகளின் எண்ணிக்கை குறையலாம்

Report Print Fathima Fathima in ஜேர்மனி

ஜேர்மனியில் 2019ம் ஆண்டு புகலிடம் கோரும் அகதிகளின் எண்ணிக்கை குறையலாம் என இடம்பெயர்வு மற்றும் அகதிகளுக்கான அலுவலகத் தலைவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் அகதிகளால் குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறப்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், புகலிடம் கோரும் அகதிகளின் எண்ணிக்கை குறைந்த வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு 160,000 பேர் விண்ணப்பித்த நிலையில், 2019ம் ஆண்டில் இதுவரையிலும் 110,000 விண்ணங்களே வந்துள்ளதாக தெரியவந்துள்ளது, ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 145,000 வரை போகலாம்.

மேலும் பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாகவும் இடம்பெயர்வு மற்றும் அகதிகளுக்கான அலுவலகத் தலைவர் Hans-Eckard Sommer தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மற்றும் குடிவரவு அதிகாரிகளுக்கான அதிகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், நாடு கடத்தப்படுதலும் தாமதம் இல்லாமல் நடத்தப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்