குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி! விரைவில் ஜேர்மனியில் சட்டம் அமுல்

Report Print Fathima Fathima in ஜேர்மனி

ஜேர்மனியில் பள்ளி மாணவர்களுக்கு தட்டம்மை தடுப்பூசியை கட்டாயமாக்கும் சட்டத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த வியாழன்கிழமை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் 459 பேர் ஆதரவாகவும், 89 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

தட்டம்மையால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜேர்மனியின் சுகாதாரத்துறை அமைச்சர் Jens Spahn தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இச்சட்டம் அமுலுக்கு வரும் என்றும், ஆசிரியர்கள், மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் அகதிகள் இடங்களில் வசிப்பவர்களும் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 501 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்