மீன் பிடிக்கச்சென்ற சிறுவர்களின் தூண்டிலில் சிக்கிய பொருள்: அதிர்ச்சியில் உறைந்த சிறுவர்கள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
1378Shares

ஜேர்மன் நகரம் ஒன்றில் மீன் பிடிக்கசென்ற சிறுவர்கள் சிலர் தங்கள் தூண்டிலில் சிக்கிய பொருட்களைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

நேற்று Wölfis என்ற கிராமத்தைச் சேர்ந்த சில சிறுவர்கள் மீன் பிடிப்பதற்காக குளம் ஒன்றிற்குச் சென்றனர்.

அவர்கள் தங்கள் தூண்டிலில் வலிமையான காந்தங்களைப் பொருத்தியிருந்தனர்.

தூண்டில் போட்ட உடனேயே தூண்டில் கனமாக இருக்க, மீன் சிக்கி விட்டது என மகிழ்ச்சியுடன் சிறுவர்கள் தூண்டிலை இழுக்க, தூண்டிலின் முனையில் இருந்த பொருட்களைக் கண்டதும் அதிர்ந்து போன சிறுவர்கள் பயந்துபோய் தூண்டிலை அங்கேயே விட்டு விட்டு நேராக பொலிஸ் நிலையத்திற்கு ஓடினர்.

தூண்டில்களில் சிக்கியது என்ன தெரியுமா?

இரண்டாம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளின் துண்டுகள் மற்றும் துப்பாக்கிக் குண்டுகள்.

உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த பொலிசார், அந்த பகுதியிலுள்ள அனைவரையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.

அதே நேரத்தில் மீன் பிடிப்பதற்கு இம்மாதிரி ஏடாகூடமான முறைகளை பின்பற்ற வேண்டாம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இரண்டாம் உலகப்போர் முடிந்து சுமார் 75 ஆண்டுகள் ஆகிவிட்டது என்னவோ உண்மைதான், என்றாலும், இப்போதும் ஜேர்மனியில் அந்த கால கட்ட வெடிகுண்டுகள் கிடைப்பது தொடர்கதையாகவே ஆகிவிட்டது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்