ஜேர்மனியில் பெரிய தாக்குதல் நடத்தி பல பேரைக் கொல்ல மர்ம நபர் சதிதிட்டம்: பொலிஸ் முறியடிப்பு

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனியில் பெரிய தாக்குதல் நடத்தி பலரைக் கொல்லும் நோக்கத்தோடு செயல்பட்டு வந்த மர்ம நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தாக்குதலைத் திட்டமிடும் நோக்கத்துடன் தீவிரவாத தூதர் குழு மூலம் வெடிகுண்டு கட்டுமானப் பொருட்களை பரிமாறிக்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 37 வயது சிரியரை ஜேர்மன் பொலிசார் செவ்வாய்க்கிழமை கைது செய்ததாக பொலிஸாரும் வழக்குரைஞர்களும் தெரிவித்துள்ளனர்.

வெடிக்கும் கருவியை உருவாக்க தேவையான ரசாயனங்கள் மற்றும் பிற பொருட்களை வாங்கத் தொடங்கிய பெர்லினில் உள்ள சந்தேக நபரின் குடியிருப்பில் பொலிஸ் சிறப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டனர் என்று பொது வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

"இந்த வெடிக்கும் சாதனம் ஜேர்மனியில் அறியப்படாத இடத்தில் தெரியாத நேரத்தில் வெடிக்கும் வகையில் முடிந்தவரை பலரைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் தயாரிக்கப்படுவதாக வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

பொலிஸ் காவலில் உள்ள சரியரை குறித்து மேலதிக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

ஐ.எஸ் குழுவிற்காக வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் ஜேர்மன் பொலிசார் கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கு நகரமான ஆஃபென்பாக்கில் மூன்று பேரை கைது செய்தனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்