ஜேர்மன் விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதல்: இரு விமானங்களுக்கும் சிறிய அளவில் சேதம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் இரு விமானங்கள் லேசாக மோதிக்கொண்டதில், இரண்டு விமானங்களும் சிறிய அளவில் சேதம் அடைந்தன.

கொரிய விமானம் ஒன்றும், ஏர் நமிபியா விமானம் ஒன்றும் பாதிக்கப்பட்ட விமானங்கள் ஆகும்.

இந்த மோதலில், கொரிய விமானத்தில் வால் பகுதியில் உள்ள கிடைமட்ட இறக்கையும், நமீபிய விமானத்தின் இறக்கையின் நுனியும் சேதமடைந்ததாக கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், இந்த மோதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்தால் சியோலுக்கு திரும்பவேண்டிய கொரிய விமானம் தாமதமானதால், பயணிகள் ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர்.

ஜேர்மனியின் ஃபெடரல் விமான விபத்து விசாரணை அமைப்பு இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றை துவக்கியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்