ஜேர்மன் முன்னாள் ஜனாதிபதியின் மகன் குத்திக்கொலை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பெர்லின் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வந்த முன்னாள் ஜேர்மன் ஜனாதிபதியின் மகனான Fritz von Weizsaecker (59), நேற்று விரிவுரையாற்றிக்கொண்டிருக்கும்போது கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார்.

பார்வையாளர்களுள் ஒருவராக அமர்ந்திருந்த ஒருவர் திடீரென கத்தியுடன் பாய்ந்து Weizsaeckerஐக் குத்தினார்.

இதில் Weizsaecker சம்பவ இடத்திலேயே பலியானார்.

தாக்குதலில் ஈடுபட்ட 57 வயது நபர் ஒருவரை, அங்கிருந்த மக்கள் போராடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதில், சீருடையில் இல்லாத பொலிசார் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த நபரை கைது செய்துள்ள பொலிசார், தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.

Weizsaecker ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த Richard von Weizsaeckerஇன் மகன் ஆவார். Richard 1984 முதல் 1994 வரை ஜேர்மனியின் ஜனாதிபதியாக இருந்தார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்