இந்திய தம்பதிக்கு ஜேர்மனியில் சிறை? உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

சீக்கிய மற்றும் காஷ்மீரி சமுதாயத்தினரை உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்திய தம்பதி ஜேர்மனியில் இன்று நீதிமன்றம் ஒன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

10 ஆண்டுகள் வரை சிறை செல்லும் குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் (50) மற்றும் அவரது மனைவியான கன்வால் ஜித் (51) என்னும் அந்த தம்பதிமீது பிராங்பர்ட்டிலுள்ள ஒரு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவருகிறது.

ஜேர்மனியிலுள்ள சீக்கிய சமுதாயம் மற்றும் காஷ்மீரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் குறித்து இந்திய உளவுத்துறை ஊழியர் ஒருவருக்கு தகவல் கொடுக்க சம்மதித்ததாக மன்மோகன் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தனது கணவருடன் இணைந்து இந்திய உளவுத்துறை அலுவலர் ஒருவருடன் மாதாந்திர கூட்டங்களில் பங்கேற்றதாக அவரது மனைவி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இருவருக்கும் இதற்காக 7,200 யூரோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியைப் பொருத்தவரையில், 10,000க்கும் 20,000க்கும் இடையில் சீக்கியர்கள் அங்கு வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்