பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜேர்மனியில் இரண்டாவது உயரமான பாலம் திறப்பு...!

Report Print Abisha in ஜேர்மனி

Hochmoselbrücke என்றும் ஜேர்மனியின் இரண்டாவது மிக உயரமான பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.

Hochmoselbrücke அல்லது High Mosel பாலமானது 1.7 கிலோ மீற்றர் தூரம் கொண்டதாகும். Mosel என்ற நதியிலிருந்து 524 அடி உயரத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

நாள் ஒன்றிற்கு இந்த பாலம் வழியாக 25, 000 வாகனங்கள் கடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த பாலமானது, Eifel மற்றும் Hunsrück-யை நேரடியாக இணைக்கின்றது.

வியாழகிழமை நடைபெற்ற பாலம் திறப்பு நிகழ்ச்சியில், ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த பாலப்பணிகள் 8ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. இந்த பாலம் அப்பகுதியில் உள்ள அழகிய திராட்சை தோட்டத்தை அழிக்கும் என்றும், நிலத்தடி நீரை மாசுபடுத்தும் என்றும் பலர் வாதிட்டு வந்தனர்.

இந்நிலையில், இப்பாலப்பணிகள் நிறைவு பெற்று தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Quelle: t-online.de / dpa

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்