102 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பலிலிருந்து கிடைத்த புதையல்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

நீரில் மூழ்கி புதையல் தேடும் குழு ஒன்றிற்கு, 102 ஆண்டுகளுக்கு முதல் உலகப்போரின்போது மூழ்கிய கப்பல் ஒன்றிலிருந்து புதையல் கிடைத்துள்ளது.

புதையல் என்றால் தங்கமும் வெள்ளியும் அல்ல... ரஷ்ய மன்னர் அருந்தியதாக கருதப்படும் மதுபானம்.

முதல் உலகப்போரின்போது பிரான்சிலிருந்து ரஷ்யாவுக்கு சென்றுகொண்டிருந்த Kyros என்னும் கப்பல், ஜேர்மானிய நீர்மூழ்கியான UC58ஆல் 1917ஆம் ஆண்டு வழிமறிக்கப்பட்டது.

அப்போது ரஷ்யாவை Czar Nicholas II என்ற மன்னர் ஆண்டு வந்தார். அந்த கப்பலிலிருந்த பொருட்கள் சட்டவிரோதமானது என்று கருதப்பட்டதால் அந்த கப்பலிலிருந்த ஆட்கள் இறக்கிவிடப்பட்டு, கப்பல் ஜேர்மானிய வீரர்களால் வெடிகுண்டு வைத்து மூழ்கடிக்கப்பட்டது.

Instagram

கப்பலிலிருந்த ஊழியர்கள் வேறொரு கப்பலில் ஏற்றப்பட்டு ஸ்வீடனுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்போது ஜேர்மன் நீர் மூழ்கிக்குழு ஒன்று அந்த கப்பலைக் கண்டுபிடித்துள்ளது.

அதிலிருந்துதான் அக்கால மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு என்ன, அவை அருந்தத்தக்கவையா எனறு கண்டறிவதற்காக அந்த போத்தல்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Instagram

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்