பிரபல ஜேர்மன் அருங்காட்சியகத்தில் பல பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

அமெரிக்க கஜானாவுக்கு ஈடாக பாதுகாப்பு கொண்டது என கூறப்படும் பிரபல ஜேர்மன் அருங்காட்சியகத்தில் நுழைந்த கொள்ளையர்கள் பல பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பிரபல ஜேர்மன் அருங்காட்சியகமான Dresden அருங்காட்சியகத்தில் இன்று அதிகாலை கொள்ளையர்கள் நுழைந்தனர்.

அதிகாலை 5 மணியளவில் மின்னிணைப்பைத் துண்டித்த கொள்ளையர்கள் ஜன்னல் ஒன்றை உடைத்து அதன்வழியாக அருங்காட்சியகத்தில் நுழைந்துள்ளனர்.

உள்ளூர் பத்திரிகை ஒன்று பில்லியன் யூரோக்கள் மதிப்புடைய நகைகளையும் வைரங்களையும் கொள்ளையர்கள் அள்ளிச்சென்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் சரியான மதிப்பை பொலிசார் இதுவரை வெளியிடவில்லை. நேற்றிரவு அருகாமையிலுள்ள ஒரு பாலத்தில் தீவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது. அந்த தீவிபத்திற்கும் அருங்காட்சியகத்தில் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டதிற்கும் தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது.

கொள்ளையடித்து விட்டு தபிச் சென்ற கொள்ளையர்களை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்