ஜேர்மனியில் கொள்ளையடிக்கப்பட்ட விலை மதிப்பற்ற நகைகள் காப்பீடு செய்யப்படாததால் சிக்கல்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட விலை மதிப்பற்ற நகைகள் காப்பீடு செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியின் உலகப்புகழ் பெற்ற Dresden அருங்காட்சியகத்தில் நுழைந்த இருவர் விலை மதிப்பில்லாத 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று ஜோடி நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பல குளறுபடிகள் இருப்பது தெரியவந்துள்ளது. முதலாவது அவ்வளவு விலையுயர்ந்த அந்த நகைகள் காப்பீடு செய்யப்படவில்லையாம். இரண்டாவதாக, அந்த அருங்காட்சியகம் கொள்ளையடிக்கப்பட்டபோது அங்கு இரண்டு பாதுகாவலர்கள் இருந்துள்ளனர்.

அவர்கள் எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்வதற்கு பதிலாக, பொலிசாரை தொலைபேசியில் அழைக்க முயன்றுள்ளனர்.

இதனால் விலை மதிப்பற்ற நேரம் வீணாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எல்லாம் போக, பாதுகாவலுக்கு இருந்த பாதுகாவலர்களில் ஒருவர், இது அமெரிக்க கஜானாவைப்போல் பாதுகாப்பானதாம் என கேலி செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு பில்லியன் மதிப்பிலான நகைகள் கொள்ளை போயிருக்கலாம் என்று தெரிவித்துள்ள ஜேர்மன் ஊடகங்கள், இது ஜேர்மன் வரலாற்றிலேயே மிகப்பெரிய கலைப்பொருள் திருட்டு என்றும் வர்ணித்துள்ளன.

கொள்ளையடித்துச் சென்ற இருவர் தலைமறைவாகியுள்ள நிலையில், இதுவரை அவர்களை குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்