வங்கியில் பணம் எடுத்த முதியவர்: மறதியால் நேர்ந்த சோகம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
868Shares

ஜேர்மனியில் வங்கி ஒன்றில் பணம் எடுத்த முதியவர் ஒருவர், மறதியால் அந்த பணம் அடங்கிய கவரை தனது கார் மீது வைத்துவிட்டு காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

அந்த 69 வயது நபர் Wittenஇலுள்ள வங்கி ஒன்றிலிருந்து 20,000 யூரோக்கள் எடுத்துள்ளார்.

சரியாக நடக்க முடியாத அவர், தனக்கு ஒரு நல்ல கார் வாங்குவதற்காக அந்த பணத்தை எடுத்துள்ளார்.

காரின் மீது மறதியாக பணம் அடங்கிய கவரை வைத்துவிட்டு அவர் காரை ஓட்ட, பணம் அடங்கிய அந்த கவர் எங்கேயோ பறந்துபோயிருக்கிறது.

யார் கையிலாவது அந்த கவர் கிடைத்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஜேர்மனியைப் பொருத்தவரை, நல்ல விடயங்களுக்காக பணத்தை கரன்சியாக கொடுப்பது சாதாரண விடயமாகும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்