ஜேர்மன் அருங்காட்சியக திருட்டு தொடர்பாக துப்புக் கொடுப்போருக்கு பெருந்தொகை சன்மானம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் அருங்காட்சியக திருட்டு தொடர்பாக துப்புக் கொடுப்போருக்கு பெருந்தொகை ஒன்றை சன்மானமாக அளிக்க இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

திங்களன்று ஜேர்மனியின் Dresden அருங்காட்சியகத்திலிருந்து விலை மதிப்பில்லாத நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

அவர்கள் திருடிச் சென்ற பொருட்களில் புகழ் பெற்ற 49 கேரட் Dresden வெள்ளை வைரமும் அடங்கும்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பொலிசார் நான்கு பேரைத் தேடி வருகின்றனர். CCTV கமெரா காட்சிகளில் கொள்ளையர்களின் உருவம் சிக்கியும் கொள்ளையர்கள் இதுவரை சிக்கியபாடில்லை.

எனவே தற்போது பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிசார், கொள்ளை தொடர்பாக பயனுள்ள தகவல் கொடுப்பவர்களுக்கு அரை மில்லியன் யூரோக்கள் சன்மானம் அளிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்