பெர்லின் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு: ஸ்தம்பித்த விமான சேவை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

நேற்று பெர்லின் விமான நிலையத்தில் இரண்டாம் உலகப்போர் காலத்தைய வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து விமான சேவை ஸ்தம்பித்தது.

பெர்லினின் Schönefeld விமான நிலையத்தில் கட்டுமானப்பணியின்போது நேற்று 12.20 மணியளவில் இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, விமான சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பெர்லின் விமான சேவை, தங்கள் விமானத்தின் புறப்பாடு குறித்த விவரங்களை சோதித்துக்கொள்ளுமாறு பயணிகளைக் கேட்டுக்கொண்டது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. Schönefeld விமான நிலையத்திற்கு வரவேண்டிய 24 விமானங்கள் Tegel விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.

உடனடியாக வரவழைக்கப்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள் அந்த வெடிகுண்டை ஆய்வு செய்தனர்.

அந்த வெடிகுண்டு விமான நிலையத்திற்கோ, ஓடு தளங்களுக்கோ மிக அருகில் இல்லை என்பதை அவர்கள் உறுதி செய்தபின், விமான சேவையை மீண்டும் தொடரலாம் என முடிவு செய்யப்பட்டது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்