ஜேர்மனியில் ஆயுதங்களுடன் நுழைந்து மக்களை பணயக்கைதியாக பிடித்த மர்ம நபர்.. பல மணிநேர மோதல் முடிவுக்கு வந்தது

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனியில் ஆயுதங்களுடன் சூதாட்ட இடத்திற்குள் நுழைந்த மர்ம நபர், அங்கிருந்தவர்களை பணயக்கைதிகளாக பிடித்த வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோயர் சாக்சனி மாகாணத்தில் உள்ள ஸ்லாட் மெஷின் ஹாலில் உள்ள சிறிய சூதாடும் இடத்திலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உள்ளுர் நேரப்படி காலை 11:00 மணியளவில் புச்சோல்ஸ் நகரில் உள்ள சூதாட்ட இடத்திற்கு கோடரியுடன் ஆயுதம் ஏந்திய மர்ம நபர் ஒருவன் நாயுடன் நுழைந்துள்ளான்.

பின்னர், உள்ளே இருந்து மேலாளர் உட்பட நான்கு பேரை பணயகைதிகளாக பிடித்து வைத்துள்ளான். மர்ம நபர் உடலில் தற்கொலை வெடிகுண்டு உடை அணிந்திருந்தாக கூறப்பட்டது.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அப்பகுதியைச் சுற்றி வளைத்தனர் மற்றும் பணயக்கைதிகளை மீட்க சிறப்பு நடவடிக்கை பிரிவினர் களமிறங்கினர்.

பல மணிநேரங்கள் மோதலுக்கு பின், ஆயுதமேந்திய அதிகாரிகள் மர்ம நபரை உயிருடன் பிடித்துள்ளனர், ஆனால் அவரது நாய் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், மேலும் இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனையின் போது, ​​அந்த நபரின் உடலில் பல கேபிள்கள் கொண்ட வெடிகுண்டு போன்ற சாதனம் இருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர், ஆனால் வெடிகுண்டு அகற்றும் குழு அந்த சாதனம் போலி என்று உறுதிசெய்துள்ளது.

கைது செய்யப்பட்ட 29 வயதான சந்தேக நபர் மனநல சோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது அடையாளம் மற்றும் நோக்கங்கள் தெளிவாகத் தெரியவில்லை.

வெள்ளிக்கிழமை ஐரோப்பா முழுவதும் தொடர்ச்சியான கத்திக்குத்து தாக்குதல்களை அடுத்து இந்த சம்பவம் வந்துள்ளது பீதியை கிளப்பியுள்ளது. முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வரும் ஜேர்மனி பொலிஸ் இன்னும் பயங்கரவாதத்தை நிராகரிக்கவில்லை, ஆனால் ஊடக அறிக்கைகள் தீவிரவாத தொடர்புக்கு எந்த அறிகுறியும் இல்லை என்று கூறுகின்றன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்