தனக்கு 14 வயது இருக்கும்போது தன்னை பாலியல் அடிமையாக்கி துஷ்பிரயோகம் செய்த ஒருவரை, அந்த இளம்பெண் நேருக்கு நேர் கேள்வி கேட்கும் வீடியோ ஒன்று வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14 வயது இருக்கும்போது யாஸிடி இனப்பெண்ணான Ashwaq Hajji Hameed கடத்தப்பட்டு, Abu Humam என்னும் ஐஎஸ் தீவிரவாதியிடம் பாலியல் அடிமையாக விற்கப்பட்டாள்.
100 டொலர்களுக்கு அவளை வாங்கிய Humam, தினமும் அவளை வன்புணந்தான், சித்திரவதை செய்தான்.
ஒரு நாள் அவனது உணவில் தூக்க மாத்திரையை கலந்த Ashwaq, அவனிடமிருந்து தப்பியோடினாள்.
ஜேர்மனியில் நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருந்தபோது, ஒரு நாள் Stuttgart சாலையில் சென்று கொண்டிருந்த Ashwaq அருகில் ஒரு கார் வந்து நின்றது.
مشهد يهز المشاعر .. الايزيدية أشواق حجي تواجه مغتصبها الداعشي بعد خمس سنوات، وهو عراقي الجنسية، الذي استعبدها لفترة طويلة وتعرضت على يده لأبشع أنواع الانتهاكات الجسدية والنفسية حينما كانت بعمر 14 سنة.
— Yazidi الايزيدية (@Ezidi2) November 30, 2019
#الابادة_الايزيدية pic.twitter.com/YRCznNtZKX
கார் கண்ணாடி இறக்கப்பட, காரில் இருந்த நபரைக் கண்ட Ashwaq அதிர்ந்தார். காரணம், அதில் இருந்தது, முன்பு தன்னை பாலியல் அடிமையாக வைத்திருந்த Humam. துருக்கி மொழியில் பேசி, அவர் யார் என்பதே தெரியாதது போல் Ashwaq நடிக்க, நீ யார் என்று எனக்குத் தெரியும், நான் யார் என்று உனக்குத் தெரியும், நீ எங்கே வாழ்கிறாய் என்பதும் எனக்குத்தெரியும் என்று Humam கூற, அதிர்ந்து போனார் அவர்.
உடனே அங்கிருந்து அகன்ற Ashwaq, சிறிது காலத்துக்குப்பின், ஜேர்மனியை விட்டு காலி செய்துவிட்டு, ஜேர்மனியை விட ஈராக்கே பரவாயில்லை என்று, மீண்டும் ஈராக்கிலுள்ள அகதிகள் முகாம் ஒன்றில் தஞ்சமடைந்தார். தற்போது ஈராக்கில் Humam கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு Ashwaqக்கு கிடைத்துள்ளது. கேவிக்கேவி அழுதபடி தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவனை நேருக்கு நேர் பார்த்த Ashwaq, என் கண்ணைப்பார்த்து பதில் சொல், என்னை ஏன் பாலியல் துஷ்பிரயோகம் செய்தாய்? என்று கேட்க, Humamஆல் அவரை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.
எனக்கு 14 வயது இருக்கும்போது என்னை சீரழித்தாய், உன் மகன் வயது, உன் மகள் வயது, உன் தங்கை வயது இருக்கும்போது என்னை நீ வன்புணர்ந்ததால் என் வாழ்வே நாசமாய்ப்போய் விட்டது.
நீ என்னுடைய எல்லாவற்றையுமே எடுத்துக்கொண்டாய், என் கனவுகளை சிதைத்துவிட்டாய், என கண்ணீருடன் Ashwaq கதற, தலை குனிந்து நிற்கும் Humam கண்களில் கண்ணீர் வழிகிறது.
இத்தனை காலம் நெஞ்சை அழுத்திக்கொண்டிருந்த அத்தனையும் கொட்டித்தீர்க்க, மயங்கிச் சரிகிறார் Ashwaq.
இதற்கிடையில் ஈராக்கில் அகதிகள் முகாமிலிருக்கும் Ashwaqஇன் தந்தையோ, தனது மகள் மின்சாரம் உட்பட எந்த வசதியும் இல்லாத அகதிகள் முகாமில் தன்னிடம் வந்து சேர்ந்ததில் தனக்கு மகிழ்ச்சி இல்லை என்கிறார்.