நாடு கடத்தப்படுவர்களிடம் கடிவாங்கும் ஜேர்மன் பொலிசார்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியிலிருந்து நாடு கடத்தப்படுவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ள நிலையில், அவர்களால் தங்களுக்கு அதிக பிரச்சினை ஏற்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக நாடு கடத்தப்படுபவர்களுடன் விமானப்பயணம் செய்யும் பொலிசாரின் எண்ணிக்கை ஜேர்மனியில் இரட்டிப்பாகியுள்ளது, 2018ஆம் ஆண்டு நாடு கடத்தப்படுபவர்களுடன் பயணித்த பொலிசாரின் எண்ணிக்கை 11,480. 2014இல் அது 5,841 ஆக இருந்தது.

2019இல் ஜனவரிக்கும் அக்டோபருக்கும் நடுவில் மட்டும் நாடு கடத்தப்படுபவர்களுடன் பயணித்த பொலிசாரின் எண்ணிக்கை 11,480ஆகி விட்டது.

பொலிஸ் சங்கத்தின் துணைத் தலைவரான Jörg Radek கூறும்போது, நாடு கடத்தப்படுபவர்களுடன் பயணிக்கும் பொலிசார் மீது கடுமையான பாரம் சுமத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

நாடு கடத்தப்படும் பலரும் மோசமான மன நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ள நிலையில், அவர்கள் தங்களுடன் பயணிக்கும் பொலிசாரை கடிப்பது, கீறுவது, துப்புவது மற்றும் மிதிப்பது என பல விதங்களில் எதிர்ப்பு தெரிவிபதுண்டு என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சில பொலிசார் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்