திடீரென போலந்து எல்லையில் மின்சார வேலி அமைத்த ஜேர்மனி: காரணம் இதுதான்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

நேற்று திடீரென போலந்து எல்லையில் ஜேர்மனி மின்சார வேலி அமைத்தது. Guben நகரில் போலந்து எல்லையை ஒட்டி இந்த மின் வேலி அமைக்கப்பட்டது.

இப்படி திடீரென ஜேர்மனி மின் வேலி அமைக்க காரணம் என்னவென்றால், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான்.

அதாவது போலந்து எலையிலிருந்து காட்டுப்பன்றிகள் ஜேர்மனிக்குள் நுழைவதால், பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை ஜேர்மனியின் வேளாண்மை அமைச்சகம் எடுத்துள்ளது.

90 மீற்றர் உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த வேலி தற்காலிகமாகத்தான் அமைக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியைப் பொருத்தவரை, இதுவரை ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் இதுவரை யாருக்கும் வந்ததாக தெரியவரவில்லை என்றாலும், எல்லை பகுதியில், போலந்து நாட்டில் இறந்த பன்றிகள் 50இல் அந்நோய் இருப்பது தெரியவந்துள்ளது.

Pixabay

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...