அனைவருக்கும் நன்றி!.. நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஜேர்மன் மாணவரின் நெகிழ்ச்சி பதிவு

Report Print Fathima Fathima in ஜேர்மனி

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட ஜேர்மனை சேர்ந்த சென்னை ஐஐடி மாணவர் ஜேக்கப் லிண்டெந்தால் உடனடியாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், ஆஸ்டர்டாமில் பத்திரமாக வந்து தரையிறங்கினேன், விரைவில் என் குடும்பத்தினரிடம் சென்றடைவேன்.

உங்களது ஒற்றுமைக்கு நன்றி, விமானம் ஒருநாள் தாமதமான போது தங்க இடம் அளித்ததற்கும், உங்களின் மெசேஜ்களுக்கும் நன்றி.

உலகம் முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்ஆர்சிக்கு எதிரான போராட்டத்தை சுமக்கும் அனைவருக்கும் என்னுடைய மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாற்றத்தை ஒன்றிணையும் மக்கள் விரைவில் ஒன்றிணைவார்கள், உங்களுடன் இணைந்திருக்க விரும்புகிறேன், இதற்கான ஒருவழியை கண்டுபிடிக்கவும் உள்ளேன், தொடர்பிலேயே இருப்போம் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்