ஜேர்மனியில் ஒரு காலத்தில் உயிரியல் ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட தீவு: இன்று அங்கு என்ன நடக்கிறது தெரியுமா?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் நாஸி யுகத்தில் மனிதர்களைக் கொல்வதற்காக உயிரியல் ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு தீவு அது.

இன்று அதே தீவில் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ஜேர்மனியின் Riems தீவுக்குள் யாரும் எளிதில் நுழைந்துவிடமுடியாது. அங்கு வேலை செய்யும் அறிவியலாளர்கள், தீவுக்குள் நுழையும்போதும், தீவை விட்டு வெளியேறும்போதும் கிருமிநீக்கம் செய்யும் வகையில் ரசாயனங்களைக்கொண்டு ஒரு குளியல்போடவேண்டும்.

பார்வையாளர்கள் பாதுகாவலர்களின் கடுமையான சோதனைக்குப் பின்னரே தீவுக்குள் அனுமதிக்கப்படுவர்.

அங்கு நடைபெறும் ஆய்வின் ஒரு பகுதியாக, ஆடு மாடுகள் உட்பட பல விலங்குகள் உடலில் வைரஸ்கள் செலுத்தப்பட்டு அவை ஏற்படுத்தும் நோய்களால் எத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றன என்பது கண்காணிக்கப்படுகிறது.

thelocal

Friedrich Loeffler Institute என்ற ஆய்வகம் இயங்கும் அந்த தீவு ரேபிஸ், ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் மற்றும் எபோலா வைரஸ் குறித்து ஆய்வு செய்யும் உலகளாவிய மையமாக உள்ளது.

அந்த ஆய்வகத்தில், அதி பயங்கர வைரஸ்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவை பரவிவிடாமல் இருப்பதற்கான சகல பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

உலகின் பழமையான வைரஸ் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளும் ஆய்வகமான The Friedrich Loeffler Institute, 1910ஆம் ஆண்டு Loeffler என்ற முன்னணி ஜேர்மன் அறிவியலாளரால் நிறுவப்பட்டது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்