ஆல்ப்ஸ் மலையில் பயங்கரம்! உயிருடன் புதைந்த ஜேர்மனியர்கள்

Report Print Basu in ஜேர்மனி

இத்தாலியின் ஆல்ப்ஸில் 1,600 அடி பனிப்பாறை சரிந்ததில் சிக்கி தாய்-மகள் மற்றும் மற்றொரு சிறுமி என 3 பேர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலிய ஆல்ப்ஸில் பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்த ஒரு பெண், அவரது ஏழு வயது மகள் மற்றும் அதே வயதுடைய மற்றொரு சிறுமி ஆகியோர் பனிச்சரிவில் சிக்கியுள்ளனர்.

1,500 அடி நீளமுள்ள பனிப்பாறை சரிந்ததில் மூவரும் புதைந்தள்ளனர். இதில், 25 வயதான தாய் மற்றும் மற்ற பெண் குழந்தை உயிரிழந்துள்ளனர். அவரது மகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இறந்தார்.

இத்தாலிய ஊடகத்தின் படி, தாயும் மகளும் ஜேர்மனியின் துரிங்கியாவில் உள்ள ஹவுடெரோடா கிராமத்தைச் சேர்ந்தவர்கள், மற்ற சிறுமி ஜேர்மனியின் எஸ்க்வீலரைச் சேர்ந்தவர்.

மற்றொரு பனிச்சரிவு டீஃபெல்செக் பிஸ்டைத் தாக்கியதில் பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தை பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் ஜேர்மனியின் எஸ்க்வீலரைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. அவர்கள் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆல்பைன் மீட்பு படையின் செய்தித் தொடர்பாளர் வால்டர் மிலன் கூறியதாவது, அருகிலுள்ள ஆஸ்திரியாவைச் சேர்ந்த மூன்று ஹெலிகாப்டர்கள் தேடுதலில் ஈடுபட்டதாகக் கூறினார்.

செனல்ஸ் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து பனிச்சிறுக்கு வீரர்கள் காணவில்லை என்ற தகவல்கள் எதுவும் இல்லை.

அடையாளம் காணும் நடைமுறைகள் இன்னும் முழுமையடையவில்லை என்றாலும், பாதிக்கப்பட்டவர்கள் ஜேர்மனியர்கள் என்று நம்பப்படுவதாக மிலன் கூறினார்.

இப்பகுதியில் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகம் என்றும் கூறினார். போல்சானோ மாகாணத்தில் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மற்றொரு பனிச்சரிவில் ஒருவர் சிக்கிய காயப்பட்டதாகவும். பாதிக்கப்பட்டவர் சக சறுக்கு வீரர்களால் மீட்கப்பட்டதாக மிலன் கூறினார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...