ஜேர்மன் வனவிலங்கு காப்பகம் மொத்தமாக எரிந்து சாம்பல்: கருகிய நிலையில் மிருகங்கள்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியின் Krefeld நகரில் அமைந்துள்ள வனவிலங்கு காப்பகம் ஒன்று மொத்தமாக எரிந்து சாம்பலான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Krefeld நகரில் அமைந்துள்ள குரங்குகள் காப்பகமே எரிந்து மொத்தமாக சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எங்களின் மிக மோசமான அச்சம் இன்று நிறைவேறியதாக கூறும் மிருகக்காட்சிசாலை நிர்வாகம், குரங்குகள் சரணாலயத்தில் விலங்குகள் ஏதும் எஞ்சியிருக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது.

மேலும், 30 க்கும் மேற்பட்ட விலங்குகள் கொல்லப்பட்ட நிலையில் அருகிலுள்ள கொரில்லா தோட்டம் சேதங்களில் இருந்து அதிர்ஷ்வசமாக தப்பியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நகரின் பல பக்கங்கலில் இருந்து உதவிக்கரம் நீண்டுள்ளது எனக் கூறும் நிர்வாகம், ஆனால் எந்த பகுதிக்கு உதவி அதிகம் தேவை என்பதை உறுதி செய்த பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

குரங்குகள் காப்பகம் முற்றாக சேதமடைந்ததன் காரணம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால், புத்தாண்டு கொண்டாட்டத்தின் இடையே பட்டாசுகளால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என உள்ளூர் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

ஒட்டு மொத்த ஐரோப்பாவுக்கும் ஜேர்மனியே பட்டாசுகளை அதிக அளவு ஏற்றுமதி செய்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று ஆயிரக்கணக்கான பட்டாசு பிரியர்கள் ஜேர்மனி முழுவதும் பட்டாசுகளை கொளுத்தி வருகின்றனர்.

தற்போது தீக்கிரையான குரங்குகள் காப்பகமானது 1975 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகும். இந்த காப்பகத்தில் ஒராங்குட்டான்கள், சிம்பன்சிகள் மற்றும் கொரில்லாக்கள் உள்ளிட்ட பிற விலங்குகளும் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்