ஜேர்மன் உயிரியல் பூங்கா தீ விபத்து: மூன்று பெண்கள் பொலிசாரிடம் சரண்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் உயிரியல் பூங்கா தீ விபத்து தொடர்பாக மூன்று பெண்கள் பொலிசாரிடம் சரண் அடைந்துள்ளனர்.

புத்தாண்டு பிறப்பதற்கு முன் தினம், Krefeld என்னும் இடத்தில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் தீப்பிடித்ததில் ஏராளமான குரங்குகள் உயிரிழந்தன.

சம்பவ இடத்தில் lanterns எனப்படும் பறக்கவிடப்படும் விளக்குகள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அவைதான் தீ விபத்துக்கு காரணமாக இருக்கும் என கருதிய பொலிசார் அவ்வகை விளக்குகளை பறக்கவிட்டவர்களை தேடி வருவதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஒரு தாயும் அவரது இரண்டு மகள்களும் பொலிசாரிடம் சரணடைந்துள்ளனர். இவ்வகை விளக்குகளை பறக்கவிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தீ விபத்து குறித்து உள்ளூர் வானொலி மூலம் தெரியவந்ததாக தெரிவித்த அந்த பெண்கள் மூவரும், பொலிசாரிடம் தாங்களாகவே சென்று சரணடைந்தனர்.

அந்த பெண்ணுக்கு 60 வயதாகிறது, அவருடைய மகள்கள் இருவரும் வயது வந்தவர்கள். தாமாகவே வந்து தைரியமாக சரணடைந்துள்ள அவர்களைப் பார்த்தால் பொறுப்புடைய மக்கள் என்பதுபோல் தெரிகிறது என்று கூறியுள்ள பொலிசார், என்றாலும், அவர்களை விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

கவனக்குறைவு காரணமாக தீப்பிடிக்க காரணமாக இருந்ததாக தெரியவந்தாலும், அவர்களுக்கு ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...