கட்டாயத்தின் பேரில் இனப்பெருக்க உறுப்புகள் அகற்றப்பட்ட ஜேர்மானியர்கள்: ஒரு சோக செய்தி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

கட்டாயத்தின் பேரில் இனப்பெருக்க உறுப்புகள் அகற்றப்பட்ட ஜேர்மானியர்கள் இழப்பீடு கோரி குரல் உயர்த்தியுள்ளார்கள்.

2011ஆம் ஆண்டுக்கு முன் வரை, ஒருவர் தனது அடையாள ஆவணங்களில் தனது பாலினத்தை மாற்ற விரும்பினால், அவர் கட்டாயம் தனது இனப்பெருக்க உறுப்புகளை அகற்றிவிட வேண்டும் என்பது சட்டமாக இருந்தது.

25 ஆண்டுகளுக்கு முன், பெண்ணாக இருந்த Tsepo Bollwinkel ஆணாக விரும்பினார். அதற்கான விதிகள் பைத்தியக்காரத்தனமாக இருந்தபோதிலும், அவற்றை உண்மையாக பின்பற்றினார் அவர்.

விதிகளில் முக்கியமானது, அவர் தனது இனப்பெருக்க உறுப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என்பது.

தனக்கான அடையாள ஆவணங்கள் வேண்டும் என்பதால், அவர் எதற்கும் தயங்கவில்லை. தற்போது, தனக்கும் தன்னைப்போலவே பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கும் இழப்பீடு கோரி குரல் உயர்த்தியுள்ளார் அவர்.

பல ஐரோப்பிய நாடுகளில் இன்னமும் இதே நிலைதான் நீடிக்கிறது.

அதாவது, ஒருவர் தனது பாலினத்தை மாற்றிக்கொண்டு அதற்கான அடையாள ஆவணம் பெற வேண்டுமானால், அவர்கள் தங்கள் இனப்பெருக்க உறுப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும், அல்லது மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என மருத்துவர்களால் கண்டறியப்படவேண்டும்.

2018ஆம் ஆண்டு, முதன் முதலாக ஸ்வீடன் இதேபோல் கட்டாயத்தின் பேரில் இனப்பெறுக்க உறுப்புகள் நீக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கியது.

அத்துடன் அதேபோல் இழப்பீடு வழங்க ஜேர்மனிக்கும் அது கோரிக்கை விடுத்தது. ஆனால் அந்த விடயம் என்ன ஆயிற்று என்று கேட்டால் ஜேர்மன் நீதித்துறை பதில் சொல்ல மறுத்துவிட்டது, உள்துறை அமைச்சகம் பதிலே சொல்லவில்லை.

தற்போது தனக்கு குடும்பம் ஒன்று வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு திருநங்கை, சட்டம் அந்த வாய்ப்பை திருடி விட்டது என குற்றம் சாட்டுகிறார்.

1998ஆம் ஆண்டு இனப்பெருக்க உறுப்புகள் அகற்றப்பட்ட சாரா என்னும் பெண், நடந்த மனித உரிமை மீறல்களுக்கு அரசியல்வாதிகள் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார். இது எங்களது தனிப்பட்ட கடந்த காலத்தைக் குறித்த பிரச்சனை அல்ல என்று கூறும் அவர், இது இந்த நாட்டின் வரலாற்றைக் குறித்தது என்கிறார்.

பாதிக்கப்பட்டவர்கள் பலர் இறந்து போனார்கள் என்று கூறும் சாரா, சட்டத்தின் பெயரால் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அவர்கள் புரிந்துகொள்வதற்கு முன், எங்களில் எத்தனை பேர் இந்த உலகத்தை விட்டு போயிருப்பார்களோ தெரியவில்லை என்கிறார் ஆதங்கத்துடன்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்