வெளிநாட்டில் கொடூரமாக கொல்லப்பட்ட ஜேர்மானியர்கள்: ரத்தக்காயங்களுடன் மீட்கப்பட்ட 11 பேர்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

இத்தாலியின் முக்கிய சுற்றுலா பகுதியில் பேருந்துக்கு காத்திருந்த ஜேர்மானிய சுற்றுலாப் பயணிகள் மீது கார் மோதிய விபத்தில் சம்பவயிடத்திலேயே 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் 11 பேர் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.

ஞாயிறன்று இளம் ஜேர்மானிய சுற்றுலாப் பயணிகள் 17 பேர் இத்தாலியின் Luttach பகுதியில் பேருந்துக்காக காத்திருந்துள்ளனர்.

சுமார் 1.15 மணியளவில் அசுர வேகத்தில் பாய்ந்து வந்த கார் ஒன்று ஜேர்மானியர்கள் மீது மோதியுள்ளது.

இதில் சம்பவயிடத்திலேயே 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மட்டுமின்றி 11 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

குறித்த தகவலை Luttach பகுதி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

(Image: FF Luttach)

காயமடைந்தவர்களை தெற்கு டைரோல் மற்றும் இன்ஸ்ப்ரூக்கில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

உள்ளூர் பத்திரிகை ஒன்றின் தகவலின்படி, பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 20 வயதின் ஆரம்பத்தில் இருக்கும் ஆண்கள் என தெரியவந்துள்ளது.

விபத்தில் ஈடுபட்ட சாரதி அந்த பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் என்றும் சம்பவத்தின் போது அதிக அளவில் ஆல்கஹால் இரத்தத்தில் கலந்திருந்ததாகவும் நம்பப்படுகிறது.

குறித்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்