ஐரோப்பாவின் பரவிய மர்ம நோய்: காரணத்தை கண்டறிந்துள்ள ஜேர்மன் அறிவியலாளர்கள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஐரோப்பாவில் பரவிய மர்ம நோய் ஒன்றினால் பலர் உயிரிழந்த நிலையில், அதற்கு காரணம் மூஞ்சூறுகள் என்று ஜேர்மன் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

கடந்த 20 ஆண்டுகளாக மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த 50 நோயாளிகளின் மூளையிலிருந்து எடுக்கப்பட்ட திசுக்களை ஆராய்ந்தபோது, அவர்களில் எட்டு பேர் போர்னா வைரஸ் என்னும் வைரஸ் தாக்குதலால் கொல்லப்பட்டது தெரியவந்தது. இந்த வைரஸ் Shrew எனப்படும் மூஞ்சூறு வகை எலிகளால் பரவியுள்ளன. இந்த மூஞ்சூறுகள் ஐரோப்பா முழுவதுமே பரவலாக காணப்படுகின்றன.

குறிப்பாக ஜேர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து மற்றும் Liechtensteinஇல் இவை அதிகம் காணப்படுகின்றன.

சமீபத்தில் போர்னா வைரஸால் இறந்ததாக கண்டறியப்பட்டுள்ள நோயாளிகள் அனைவருமே தெற்கு ஜேர்மனியில் தான் வாழ்ந்துள்ளார்கள்.

இந்த நோய் தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ள ஜேர்மனியின் Regensburg பல்கலைக்கழக மருத்துவமனையின் பேராசிரியரான Barbara Schmidt கூறும்போது, இது இப்போது தோன்றியுள்ள புது நோய் அல்ல, மனிதர்களின் கவனத்துக்கு வராமலேயே 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துள்ள ஒரு நோயாக இது இருக்கலாம்.

மூஞ்சூறுகள் வாழ்ந்த பகுதிகளில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, எதனால் அந்த காய்ச்சல் ஏற்பட்டது என்பதே தெரியாமல் உயிரிழந்த பலரது மரணங்களுக்கு இந்நோய் காரணமாக இருந்திருக்கலாம் என்கிறார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்