பாதரசம் கலந்த உணவு... கோமா நிலையில் மரணமடைந்த ஜேர்மானிய இளைஞர்: பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியில் பாதரசம் கலந்த உணவால் 4 ஆண்டுகளாக கோமாவில் இருந்த இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

ஜேர்மனியின் Bielefeld பகுதி நீதிமன்றம் வியாழனன்று தொடர்புடைய 26 வயது இளைஞரின் மரணத்தை உறுதி செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 57 வயது நபர் கடந்த ஆண்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

குறித்த இளைஞர் பாதரசம் கலந்த உணவை சாப்பிட்ட அன்று முதல் கோமாவில் இருந்து வந்ததாகவும், அவர் அனுபவித்த துயரங்களையும் அவரது பெற்றோர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டு கண்ணீர் வடித்துள்ளனர்.

இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 57 வயது நபர் தமது சக ஊழியர்கள் சிலருக்கு பாதரசம் கலந்த உணவை வழங்கி வந்துள்ளார்.

இதில் ஒருவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில், எஞ்சிய இருவர் கடுமையான சிறுநீரக பாதிப்புக்கு இரையாகியுள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளால் சிக்கிய அந்த 57 வயது நபர்,

சக ஊழியர்களுக்கு மர்மமான முறையில் உணவில் பாதரசம் உள்ளிட்ட சந்தேகத்திற்கிடமான தூளை கலப்பது அம்பலமானது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்