புலம்பெயர்வோரை மீட்பதற்காக நன்கொடை அளித்த பாதிரியார் மீது விமர்சனம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
256Shares

கடலில் சிக்கித்தவிக்கும் புலம்பெயர்வோரை மீட்பதற்காக நன்கொடை அளித்த மூத்த ஜேர்மன் பாதிரியார் ஒருவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மூத்த ஜேர்மன் பாதிரியாரான Cardinal Reinhard Marx, கடலில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்வோரை மீட்பதை ஆதரிக்கும் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு 50,000 யூரோக்கள் நன்கொடை அளித்திருந்தார்.

ஆனால், வலதுசாரிக் கட்சியான AfD, இத்தகைய மீட்பு நடவடிக்கைகள் மக்களை கடத்துவோரை உற்சாகப்படுத்தும் விதத்தில் அமையும் என்று கூறி, அவரிடம் விளக்கம் கோரியுள்ளது.

AfD அரசியல்வாதி ஒருவர், Marx ஏன் திருச்சபை பணத்தை நன்கொடைக்கு பயன்படுத்தினார் என்றும், அவர் தனது சொந்த பணத்தை நன்கொடையாக கொடுத்துள்ளாரா என்றும் கேள்வி எழுப்பி, மத்திய தரைக்கடல் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபடும் படகுகள், உயிரைப் பணயம் வைத்து பலர் ஐரோப்பாவிற்குள் கடல் வழியாக நுழைய வழிவகுக்கும் என்றும் வாதிட்டுள்ளார்.

மற்றொரு AfD அரசியல்வாதி, Marx சபைப் பணமான 50,000 யூரோக்களை தவறாக பயன்படுத்துகிறார், அப்படி செய்வதன் மூலம் மனித கடத்தல் செய்வோரை ஊக்குவிக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்