முன்னாள் மந்திரி கொல்லப்பட்ட வழக்கில் இலங்கை தமிழருக்கு ஜேர்மனில் சிறை!

Report Print Vijay Amburore in ஜேர்மனி

மறைந்த வெளியுறவு மந்திரி லட்சுமன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், இலங்கை தமிழருக்கு சிறைத்தண்டனை விதித்து ஜேர்மன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மறைந்த வெளியுறவு மந்திரி லட்சுமன் கதிர்காமர், ஒரு தமிழ் வழக்கறிஞர், ஜனாதிபதியின் ஆலோசகர், அரசியல்வாதி மற்றும் இராஜதந்திரி ஆவார்.

இவர் ஆகஸ்ட் 12, 2005 அன்று கொழும்பு 7 இல் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட, விடுதலை புலிகள் உளவு அமைப்பின் முன்னாள் உறுப்பினரான நவநிதன் ஜி, புலிகள் அமைப்பிற்கு கதிர்காமர் தொடர்பான தகவல்களை அளித்ததாக, Stuttgart-ல் உள்ள பிராந்திய நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது.

இதனையடுத்து அவருக்கு ஆறு ஆண்டுகள் மற்றும் 10 மாத சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஜேர்மன் ஊடக அறிக்கையின்படி, 2012ல் அவர் புகலிடம் கோரியபோது ஜேர்மன் அதிகாரிகளுடனான நேர்காணலில் கதிர்காமர் கொலை தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆனால் அப்போது அவரது அறிக்கை தவறாக மொழிபெயர்க்கப்பட்டதாகக் கூறியுள்ளது.

மேலும், இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என ஜெர்மன் செய்தி நிறுவனம் டி.பி.ஏ.தெரிவித்துள்ளது

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...