ஜேர்மனியில் இரண்டு இடங்களில் அடுத்தடுத்து வெடிக்காத வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு: 12,000 பேர் வெளியேற்றம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் இரண்டு இடங்களில் இரண்டாம் உலகப்போரின்போது வீசப்பட்ட வெடிக்காத வெடிகுண்டுகள் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, 12,000 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

மேற்கு ஜேர்மனியின் கொலோன் நகரில், ரைன் நதிக்கரையில், 500 கிலோகிராம் எடையுள்ள இரண்டாம் உலகப்போர் கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அலுவலகங்களில் பணிபுரிந்த 10,000 பேரும் வீடுகளிலிருந்த 15 பேரும் வெளியேற்றப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் 25 நிமிடங்களில் அந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்தனர்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு மத்திய பெர்லினில் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த சுற்றுவட்டாரத்திலிருந்த சுமார் 2,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

அந்த வெடிகுண்டு 30 நிமிடங்களில் செயலிழக்கச் செய்யப்பட்டது.

பொலிசார், சூழ்நிலையைப் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு கொடுத்ததற்காக வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டவர்களுக்கு, தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்