பொலிசாரை கத்தியைக் காட்டி மிரட்டிய ஒரு பெண்ணை பொலிசார் துப்பாக்கியால் சுட்டதில், அந்த பெண் உயிரிழந்துள்ளார்.
பெர்லினில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் உள்ள ஒரு வீட்டில் இரண்டுபேர் தங்கியிருந்திருக்கின்றனர்.
நேற்று அதிகாலை 4 மணியளவில், அவர்களில் ஒரு பெண் கத்தியால் குத்திவிடுவதாக மற்றவரை மிரட்டியுள்ளார்.
பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, விரைந்துவந்த பொலிசார் அந்த பெண் இருந்த அறைக்குள் நுழைய முயன்றிருக்கிறார்கள்.
அப்போது அந்த 33 வயது பெண் அவர்களை விட மறுத்ததோடு, கத்தியைக் காட்டி மிரட்டியிருக்கிறார்.
உடனே, பொலிசாரில் ஒருவர் அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். மருத்துவ உதவிக்குழுவினர் வந்து அந்த பெண்ணை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார்.
தங்கள் சக பொலிசார் அந்த நேரத்தில் செய்தது சரியானதுதான் என்று கூறியுள்ள பொலிசார், என்றாலும் அவர் விசாரணைக்குட்படுத்தப்படுவார் என்று தெரிவித்துள்ளனர்.