நாளொன்றிற்கு ஒரு யூரோ மட்டுமே: பெர்லின் போக்குவரத்து திட்டத்திற்கு எதிர்ப்பு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பொது போக்குவரத்துக்கு நாளொன்றிற்கு ஒரு யூரோ வீதம் ஆண்டுக்கு 365 யூரோக்கள் மட்டுமே செலுத்தி பயணச்சீட்டு பெறும் திட்டம் ஒன்றை பெர்லின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்வைத்துள்ளனர்.

ஆனால் அதற்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது. முனிச் நகர போக்குவரத்து நிறுவன தலைவரான Bernd Rosenbusch அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

வியன்னா நகரத்தில், 2012இலிருந்து ஆண்டுக்கு 365 யூரோக்கள் மட்டுமே செலுத்தி பயணச்சீட்டு பெறும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

அதை பின்பற்றித்தான் பெர்லின் மேயர் Michael Müller இந்த திட்டத்தை பெர்லினுக்கும் கொண்டுவர திட்டமிட்டார்.

இந்த திட்டத்தால் ரயில், பேருந்து ட்ராம் என மொத்த போக்குவரத்துக்கும் மக்கள் செலவிடும் தொகை கணிசமாக குறையும்.

தற்போதைக்கு குறைந்தபட்சம் மக்கள் 728 யூரோக்கள் போக்குவரத்துக்காக செலவிடுகிறார்கள். ஆனால், இந்த திட்டத்தால், வியன்னாவில் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்கிறார் Rosenbusch.

உண்மையில், பார்க்கிங் கட்டணத்தை அதிகரித்ததாலும், போக்குவரத்து உட்கட்டமைப்பை விரிவாக்கம் செய்ததாலும் மட்டுமே அதிகம் பேர் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தத்தொடங்கினார்கள் என்கிறார் அவர்.

இந்த திட்டத்தால் செலவீனம்தான் அதிகரித்தது என்கிறார் Rosenbusch.

பெர்லினுக்கும் இந்த திட்டத்தால் ஆண்டொன்றிற்கு 160 மில்லியன் யூரோக்கள் வரை இழப்பீடு ஏற்படலாம்.

அதனால் இப்படி கட்டணத்தை குறைப்பதைவிட உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தலாம் என்கிறார் அவர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers