ஜேர்மனியில் கொரோனா வைரஸால் முதல் நபர் பாதிப்பு! அதிகாரபூர்வ தகவல் வெளியானது

Report Print Raju Raju in ஜேர்மனி

ஜேர்மனியில் கொரோனா வைரஸால் முதல் நபர் பாதிக்கப்பட்டுள்ளதை அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

ஜேர்மனியின் தெற்கில் உள்ள Bavarianன் Starnberg பகுதியை சேர்ந்த நபர் தான் இந்த உயிர்கொல்லி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவர் தான் நாட்டில் முதன் முதலாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் என சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நோயாளி தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

நோயாளி எவ்வாறு நோய்த்தொற்றுக்கு ஆளானார் என்பது குறித்து மேலதிக விவரங்களை அமைச்சகம் வழங்கவில்லை, ஆனால் அவர் மருத்துவ ரீதியாக நல்ல நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து இந்த வைரஸ் பரவும் நிலையில் அந்நாட்டுக்கு செல்வதை ஜேர்மனியர்கள் முடிந்தளவு தவிர்க்க ஜேர்மனி அரசாங்கம் குடிமக்களுக்கு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers