பிரெக்சிட்டுக்கு பின் ஜேர்மனிதான் ஆபத்பாந்தவன்: ஜேர்மன் அமைச்சர் ஆருடம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பிரெக்சிட்டுக்குப்பின் பிரித்தானியாவின் இடத்தை நாங்கள்தான் பிடிக்கப்போகிறோம் என்று கூறியுள்ள ஜேர்மன் அமைச்சர் ஒருவர், இனி நாங்கள்தான் சிறிய நாடுகளுக்கு பாதுகாவல் என்று கூறியுள்ளார்.

ஐரோப்பிய அமைச்சராக பொறுப்பிலிருக்கும் ஜேர்மன் அமைச்சரான Michael Roth, ஐரோப்பாவின் சிறிய வடக்கு லிபரல் குடியரசு நாடுகள், இனி ஜேர்மனியைத்தான் பாதுகாப்புக்காக நம்பியிருக்கும் என்று கூறியுள்ளார்.

பொருளாதார ரீதியில் சுதந்திரமான ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிப்பதில் இதுவரை பிரித்தானியாவுக்கு பின்னால் நின்ற பணக்கார நாடுகளுக்கு ஜேர்மனி கடமைப்பட்டிருக்கும் என்றார் அவர்.

பிரெக்சிட்டுக்குப்பின் ஐரோப்பிய ஒன்றியம் சம நிலைப்படுத்தப்படும் என்று கூறிய அவர், டென்மார்க், சுவீடன் அல்லது நெதர்லாந்துக்கு பிரித்தானியா ஒரு முக்கிய கூட்டாளியாக இருந்தது.

இப்போது, அந்த நாடுகள் ஜேர்மனியுடன் நெருக்கமான உறவு வைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றன என்றார்.

இதுவரை, ஒன்றுடன் ஒன்று அரசியல் நெருக்கம் காட்டாத தனக்கு வடக்கிலிருக்கும் நாடுகளை ஒன்றிணைத்து, பொருளாதார ஒத்துழைப்பை மையப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியத்திற்காக வாதாடும் ஒருவராக பிரித்தானியா இருந்துவந்த நிலையில், ஜனவரி 31 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு அது வெளியேறுவதால், அதன்பின் தனது கருத்துக்களை முன்வைக்கும் நிலையில் அது இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers