பிரெக்சிட்டால் ஒரு ஜேர்மன் கிராமத்தில் ஏற்பட்டுள்ள குழப்பமான உணர்வுகள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பிரெக்சிட் பவேரியாவிலுள்ள ஒரு கிராம மக்களுக்கு குழப்பமான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதையடுத்து, புவியியல் ரீதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மையப்பகுதி இடம் மாறுகிறது.

தற்போது பவேரியாவிலுள்ள Westerngrund என்ற இடம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மையப்பகுதியாக உள்ளது.

பிரித்தானியா வெளியேறுவதால், அது சற்று நகர்ந்து Gadheim என்ற கிராமத்திற்கு வருகிறது.

அதாவது, பிப்ரவரி 1ஆம் திகதியிலிருந்து Gadheimதான் ஐரோப்பிய ஒன்றிய நிலப்பரப்பின் மையமாக கருதப்படும். Gadheim கிராமத்தில் வெறும் 80 பேர்தான் வாழ்கிறார்கள்.

தற்போது அந்த இடத்தில், ஒரு தோட்டம் அமைக்கப்பட்டு, அங்கு ஜேர்மானிய மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளுடன் உள்ளூர் கொடிகளும் நடப்பட்டுள்ளன.

அந்த கிராமத்தில் வாழும் Karin Kessler என்னும் பெண்மணி, இந்த புதிய மாற்றம் தன் கிராம மக்களுக்கு குழப்பமான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கிறார்.

AFP

2017ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஐரோப்பிய ஒன்றியத்தின் மையப்பகுதி Gadheimக்கு மாறும் என்று கூறப்பட்டபோது அது வேடிக்கைக்காக கூறப்பட்டது என்று தான் எண்ணியதாக குறிப்பிடுகிறார் அவர்.

அதே நேரத்தில், பிரித்தானியா வெளியேறுவது ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தைக் குறித்த அச்சத்தை உள்ளூர் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

பிரெக்சிட்டால், பிரித்தானியா மீதும், மீதமுள்ள ஐரோப்பா மீதும் எவ்வித தாக்கம் ஏற்படும் என்பது யாருக்கும் தெரியாது என்று கூறும் Juergen Goetz என்பவரின் தந்தை இரண்டாம் உலகப்போரில் ஒரு போர்வீரராக பங்கேற்றவர்.

மேலும், முன்பு மையமாக இருந்த Westerngrundஇல் உள்ளவர்களும், அது தற்காலிகமானதுதான் என்பதை உணர்ந்திருந்தார்களாம்.

ஏனென்றால், ஒவ்வொரு புது நாடு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும்போதும் அதன் புவியியல் மையம் மாறிக்கொண்டேதான் இருக்கும்.

ஆனால், இம்முறை ஒரு நாடு பிரிந்து செல்வதால் அது மாறுவது வரலாற்றுப்பூர்வமாக ஒரு முக்கிய நிகழ்வுதான் என்கிறார் Goetz.

அடுத்த முறையாவது, மற்றொரு புதிய நாடு இணைவதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் மையம் நகரட்டும் என்கிறார் அவர்.

Credit: DPA

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers