ஓடும் ரயில் முன் பெண்ணை தள்ளிவிட்ட நபர்: வித்தியாசமான தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் வேகமாக வரும் ரயில் முன் ஒரு பெண்ணை தள்ளிவிட்ட நபருக்கு வித்தியாசமான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

28 வயது ஆண் ஒருவர், திடீரென 34 வயது பெண் ஒருவரை வேகமாக வரும் ரயில் முன் தள்ளிவிட்டதில், அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்ட அந்த ஆண், தான் வேண்டுமென்றே தள்ளிவிடவில்லை என்றும், தனக்கு தலை சுற்றியதாகவும், யார் மீதாவது சாய்ந்துகொள்வதற்காக அந்த பெண் மீது சாயும்போது அவர் ரயில் தண்டவாளத்தில் விழுந்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.

ஆனால், அந்த நபருக்கு schizophrenia என்னும் பிரச்சினை உள்ளதால், அதாவது எது நிஜம் எது கற்பனை என்பதை வேறு பிரித்தறிய தடுமாறும் பிரச்சினை உள்ளதால், அவரை தண்டிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

அதே நேரத்தில், அவரை வெளியே விடுவது மற்றவர்களுக்கு ஆபத்து என்பதால், அவரை வாழ்நாள் முழுவதும் மன நல மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers