இன்று பிரெக்சிட்... எனது பிரித்தானிய பாஸ்போர்ட்டை இழக்க துணிந்துவிட்டேன்: ஜேர்மனியில் வாழும் பிரித்தானியர்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

இன்று பிரெக்சிட்... பிரித்தானியாவில் வாழும் பிரித்தானியர்களில் பலருக்கு அது மகிழ்ச்சியை அளிக்கலாம்.

ஆனால், மற்ற நாடுகளில், குறிப்பாக ஜேர்மனியில் உள்ள பிரித்தானியர்கள், பிரெக்சிட்டால் தாங்கள் ஏமாற்றமும் கோபமும் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

டேவிட் மூர் (80) என்பவர், அப்படியே, அதே வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் அவர்.

கொலோனைச் சேர்ந்த சைமன் அருவருப்பும் சோகமும் அடைந்துள்ளதாக தெரிவிக்கிறார். இப்படி ஒரு நிலை வந்திருக்கக்கூடாது என்கிறார் அவர்.

பிரெக்சிட் என்னை ஒரே நேரத்தில் ஒரு பிரித்தானியனாகவும் ஜேர்மானியனாகவும் இருக்கவேண்டாம் என தீர்மானிக்க வைத்துள்ளது.

Photo: Rachel Loxton

அதற்குப்பதில், நான் ஒரு ஜேர்மானியனாக மட்டும் இருக்க முடிவு செய்துள்ளேன் என்று கூறும் சைமன், என்னுடைய பிரித்தானிய குடியுரிமையையும் இழக்க முடிவு செய்துவிட்டேன் என்கிறார்.

அதற்கு முக்கிய காரணம், பிரெக்சிட் வாக்களிப்பில் வாக்களிக்கும் உரிமை எனக்கு கொடுக்கப்படாததுதான் என்கிறார் சைமன்.

பத்தாண்டுகளுக்கு மேலாக பெர்லினில் வாழும் ஸ்காட்லாந்து நகைச்சுவையாளரான கிறிஸ் டேவிஸ் (34), அதே உணர்வைத்தான் வெளிப்படுத்துகிறார்.

தடையில்லா போக்குவரத்து முடிவுக்கு வருவதுதான் எல்லாவற்றிலும் மோசம் என்கிறார் அவர்.

அதனால், வரும் காலத்தில் பிரித்தானிய குடியுரிமையை இழப்பதில் எனக்கு பிரச்சனை எதுவும் இல்லை என்கிறார் கிறிஸ்.

Gloucestershireஇல் வளர்ந்த பெர்லினில் வாழும் ரோஸ் நெவெல் (33), 2012இல் ஜேர்மனிக்கு குடிபெயர்ந்தார். பிரெக்சிட்டால் உணர்வு ரீதியாக தான் செத்துப்போய்விட்டதுபோல் இருக்கிறது என்கிறார் ரோஸ்.

நீண்ட நாட்களாக தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்திபோல, அது தொந்தரவு செய்துகொண்டே இருந்தது என்கிறார் அவர்.

அவர் ஓராண்டுக்கு முன்பே ஜேர்மன் குடியுரிமை வாங்கிவிட்டார். அதனால் அவருக்கு கவலையில்லை என்றாலும், மீண்டும் எதிர்காலத்தில் பிரித்தானியாவுக்கு திரும்ப விரும்பினால் ஏற்படவிருக்கும் பிரச்சனைகளைக் குறித்து அவருக்கு கவலை இருக்கிறது. காரணம், அவரது கணவர் பிரித்தானியர் அல்ல!

Photo: Rachel Loxton

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers